“மெயின் ஷிஃப் 5” என்ற சொகுசு பயணிகள் கப்பல் இன்று (29) காலை 2,000 சுற்றுலா பயணிகளுடன் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
Aitken Spence PLC மற்றும் TUI ஆகியவற்றின் கூட்டு முயற்சியான The Hapag Lloyd Lanka, இலங்கையின் சுற்றுலாத் துறையின் மறுமலர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில், ‘Mein Schiff 5’ எனும் அதி சொகுசுக் கப்பலை இன்று (நவம்பர் 29) கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள நிலையில் நாளை அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.