உலகின் மிகப்பெரிய உக்ரைனிய சரக்கு விமானமான அன்டோனோவ் ஆன்-225 (Antonov An-225) விமான வகையை சேர்ந்த மற்றொரு சரக்கு விமானம் இலங்கையில் தரையிறக்கப்பட்டுள்ளது.
அன்டோனோவ் ஆன் – 225விமானத்தின் வகையை சேர்ந்த மற்றொரு சரக்கு விமானமான “antonov An-124-100” விமானம் மத்தள சர்வதேச விமான நிலையத்தில் இன்று(27) அதிகாலை 6.35 இற்கு தரையிறங்கியுள்ளது.
விமானத்திற்கு எரிபொருள் நிரப்புவதற்கும் விமான ஊழியர்கள் ஓய்வெடுத்து செல்லவும் தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மலேசியாவில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி செல்லும் வழியில் இவ் விமானம் மத்தள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.
இலங்கையில் இருந்து இன்று இரவு புறப்படவுள்ள இந்த விமானத்தில் மொத்தம் 24 பணியாளர்கள் உள்ளனர்.