களனிப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்றின் போது, பொலிஸார் பொறுப்பேற்ற சுமார் 02 கோடி ரூபா பெறுமதியான தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயப் கையிருப்பு என்பன முறைகேடு இடம்பெற்றுள்ளதாக வழங்கப்பட்ட முறைப்பாட்டு அமைவாக குறித்த நால்வரும் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் பொலிஸ் உதவி அத்தியட்சகர், சார்ஜென்ட் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவின் சென்னையிலிருந்து இலங்கை வந்த 6 பெண்களைக் கொண்ட குழுவிடம், தலா 6 பவுண் எடையுள்ள 4 பெரிய வளையல்கள் மற்றும் 140 கிராம் எடையுள்ள 04 மோதிரங்கள், அத்துடன் 3,500 டொலர் பணம் என்பன இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேல் வடமாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரிடம் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் குறித்த நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.