நாடளாவிய ரீதியில் உள்ள பல பாடசாலைகளின் ஆசிரியைகள் இன்று (21) சேலை அணிவதற்குப் பதிலாக வேறு ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு வருகை தந்துள்ளனர்.
தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியால் சேலை அணிவது அதிக செலவு கொண்ட வியடமாக உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆசிரியர்களின் ஆடையான சேலையை மாற்றுவது தொடர்பில் தாம் தீர்மானிக்கப்போவதில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் அண்மையில் தெரிவித்திருந்த நிலையில் ஆசிரியர்கள் இன்று வேறு ஆடைகளில் பாடசாலைகளுக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.