Our Feeds


Friday, November 18, 2022

News Editor

இந்திய செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது முதல் தனியார் ரொக்கெட்


 

இந்தியாவின் முதல் தனியார் ரொக்கெட் இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இரண்டு இந்திய செயற்கைகோள்களையும் இந்த ரொக்கெட் சுமந்து செல்கிறது.

விண்வெளி வர்த்தகத்தில் உலகளாவிய சந்தைப் போட்டியைச் சமாளிப்பதற்காக ரொக்கெட் தயாரிப்பில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை ஊக்குவிக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) முடிவு செய்தது.

இதற்காக 2020ஆம் ஆண்டு இன்ஸ்பேஸ் (Inspace) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதன்மூலம் ரொக்கெட், செயற்கைக்கோள் தயாரித்தலில் தனியார் நிறுவனங்களும் அனுமதிக்கப்பட்டன. அந்த வகையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்கைரூட் எனும் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தனது ராக்கெட்களை விண்ணில் செலுத்துவதற்காக இஸ்ரோவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

ஓராண்டுக்கும் மேலாக ரொக்கெட் தயாரிப்பு பணிகளில் ஸ்கைரூட் ஈடுபட்டு வந்தது. வெவ்வேறு எடைகளைச் சுமந்து செல்லக்கூடிய 3 விதமான ரொக்கெட்கள் வடிவமைக்கப்பட்டன. அதற்கு இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தையான மறைந்த விஞ்ஞானி விக்ரம் சாராபாய் நினைவாக ‘விக்ரம்’ என்று பெயரிடப்பட்டது. அதில் சுமார் 480 கிலோ எடையை சுமந்து செல்லக்கூடிய ‘விக்ரம் எஸ்’ ரொக்கெட்டை சோதனை முயற்சியாக தற்போது விண்ணில் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »