டிசெம்பர் மாத இறுதிக்குள் இந்நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துப் பற்றாக்குறைக்கு ஓரளவிலான தீர்வை வழங்க முடியும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து இந்நாட்டிற்கு தேவையான மருந்துகளை இறக்குமதி செய்யும் வேலைத்திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதன்படி மருந்துப் பற்றாக்குறையை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் வலியுறுத்தியுள்ளார்.