வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நாளை (29) அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் அமெரிக்க அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பின் போது இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் கடன் மறுசீரமைப்பு செயல்முறை முக்கிய நிகழ்ச்சி நிரலாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விஜயத்தின் போது, அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கன் மற்றும் பல உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.