ஊழியர்களுக்கு நாளாந்த சம்பளம் வழங்குவதற்குப் பதிலாக ஹெரோயின் பொதிகளை வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் ஒருவரை நவகமுவ பொலிஸார் சனிக்கிழமை (12) கைது செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட நபர் நவகமுவ பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடையவர்.
தோட்ட அலங்கார தொழிலில் ஈடுபட்டு வந்த இவரின் கீழ் 6 பேர் பணியாற்றி வந்தனர்.
அந்த தொழிலாளர்கள் போதைக்கு அடிமையானதால், அவர்களுக்கு காலை, பகல், மாலை என தலா ஒரு பக்கெற் போதைப்பொருள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நபரிடம் பொலிஸார் விசாரணை நடத்தியபோது, பணம் கொடுத்தால் மறுநாள் வேலைக்கு வரமாட்டார்கள் என்பதால் ஹெராயின் பொதிகளை தாம் கொடுத்ததாக கூறியுள்ளார்.