Our Feeds


Friday, November 11, 2022

RilmiFaleel

வெளிநாட்டிலிருந்து அனுப்பப்பட்ட பொதியில் போதைப்பொருள் – யுவதி கைது.



வெளிநாட்டிலிருந்து விமானம் மூலம் அனுப்பப்பட்ட பொதியில் போதைப்பொருள் இருந்தமையையடுத்து நேற்று மாலை காலி பிரதான தபால் நிலையத்தின் வெளிநாட்டு பொதி பிரிவுக்கு குறித்த பொதியைப் பெற்றுக் கொள்ள வந்த யுவதியொருவர் கைது செய்யப்பட்டதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.


ஹபராதுவ தல்பே பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய யுவதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பொதி Maria Guada Lopa Santos 27 Toledo Yuba City Ca 05 95991 என்ற முகவரியில் இருந்து அனுப்பப்பட்ட நிலையில், சந்தேகமடைந்த அதிகாரிகள் குறித்த பொதியை சோதனை செய்தனர்.

இதன் போது அந்த பொதியில், 1960 கிராம் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்படி, போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அதிகாரிகள் குறித்த சந்தேக நபரை கைது செய்தனர்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »