Our Feeds


Friday, November 25, 2022

News Editor

இறுதி நேரத்தில் இரு கோல்களைப் பெற்று வேல்ஸை வீழ்த்தியது ஈரான்!




FIFA உலகக்கிண்ண காற்பந்து தொடரின் குழு “B”இல் இன்று இடம்பெற்ற வேல்ஸ்-ஈரான் இடையிலான போட்டியில் ஈரான் வெற்றி பெற்றது.

குறித்த போட்டியில் ஈரான் அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது.

முதல் 90 நிமிடங்களில் இரு அணிகளும் எந்தவொரு கோல்களையும் பெற்றிருக்காத நிலையில் ஈரான் அணி, 90 நிமிடங்களைத் தொடர்ந்து வழங்கப்படும் மேலதிக நேரத்தில் இரு கோல்களைப் பெற்று 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »