மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 48 மணி நேரத்தில் ஒரு மாணவி உட்பட மூவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி, கொக்கட்டிச்சோலை, வவுணதீவு ஆகிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலேயே இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கல்லாறு பகுதியில் 22 வயதுடைய சுரேஸ் விதுசன் என்ற இளைஞன் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அத்தோடு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு கிராமத்தில் 64 வயதுடைய நவரெத்தினம் என்பர் தனது கொட்டிலில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அத்துடன் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈச்சந்தீவு பகுதியில் உள்ள வீட்டில் ஞா.டிலானி என்ற கல்லூரி மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் குறித்த மூன்று சடலங்களும் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன