636 அத்தியாவசிய மருந்துகளில் 185 மருந்துகள் நாட்டில் இல்லையென ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன நாடாளுமன்றில் தெரிவித்தார்.
2023ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதம் சபையில் இடம்பெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
சாதாரண சேலைன் கூட ஒரு மாதத்திற்கான கையிருப்பு மட்டுமே இருப்பதாகவும் ராஜித சேனாரத்ன எம்.பி. குறிப்பிட்டார்.
சாதாரணமாக மூன்று மாதங்களுக்கு சேலைன் கையிருப்பு இருக்க வேண்டியது கட்டாயம் எனவும் அவர் தெரிவித்தார்.
சுகாதார அமைச்சின் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.