Our Feeds


Tuesday, November 29, 2022

News Editor

வைத்தியர்களுக்கு வீசா வழங்க வேண்டாம் - சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய


 

சுகாதார அமைச்சு, அரச நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள வழிகாட்டல் அறிவுறுத்தல்களுக்கு முரணாக நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுவதுடன்,அவர்கள் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்.

சுகாதார அமைச்சின் அனுமதி இல்லாமல் வைத்தியர்களுக்கு வீசா வழங்க வேண்டாம் என இலங்கையில் உள்ள தூதுவராலயங்களுக்கு அறிவிக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (29) எதிர்க்கட்சி தலைவர் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் மருத்துவ துறையின் சேவை முன்னெடுக்கப்படுகிறது.உயிர்காக்கும் 14 வகையான அத்தியாவசிய மருந்து இறக்குமதிக்கு பாதிப்பு ஏற்படவில்லை.948 அத்தியாவசிய மருந்து பொருட்கள் தேவையான அளவு உள்ளன.

வெளிநாட்டு சந்தையில் மருந்து பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மாதாந்தம் 2.5 மில்லியன் ரூபா செலவிடப்படுகிறது.

அத்துடன் தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக மாதாந்தம் பில்லியன் கணக்கான நிதி செலவிடப்படுகிறது.

வெளிநாட்டு கையிருப்பு பற்றாக்குறைக்கு மத்தியில் கடந்த மாதங்களில் மருந்து பொருட்களை கொள்வனவு மற்றும் இறக்குமதி செய்வதில் தாமதம் காணப்பட்டது,ஆனால் தற்போது நிலைமை முகாமைத்துவம் செய்யப்பட்டுள்ளது. தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் மருந்து பொருட்கள் தாமதமின்றி இறக்குமதி செய்யப்படுகின்றன.

வத்திய வைத்தியர்கள் ஐந்து வருட காலத்திற்கு வெளிநாடுளுக்கு சென்று சேவையாற்றலாம் என அரச நிர்வாக மற்றும் பொது நிர்வாக அமைக்கு சுற்றறிக்கை வெளியிட்டது.

இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 300 வைத்தியர்கள் மற்றும் வைத்திய சேவையாளர்கள் வெளிநாடு சென்றுள்ளார்கள்.

ஒரு வைத்தியர் வெளிநாட்டுக்கு செல்லும் போது அவரது சேவை வெற்றிடம் முழுமைப்படுத்தப்பட வேண்டும் அதற்கான வழிகாட்டல் ஆலோசனையை சுகாதாரத்துறை அமைச்சு வழங்கியுள்ளது.ஒருசில வைத்தியர்கள் முறையான வழிமுறையில் வெளிநாடு சென்றுள்ளார்கள்.

சுகாதார அமைச்சு மற்றும் அரச நிர்வாக அமைச்சு வெளியிட்ட ஆலோசனை அறிவுறுத்தல்களுக்கு முரணாக வெளிநாடு செல்லும் வைத்தியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன் அவர்கள் கறுப்பு பட்டியில் சேர்க்கப்படுவதுடன்,அவர்கள் வெளிநாடுகளில் மருத்து சேவையில் ஈடுப்படுவதற்கும் தடையேற்படுத்தப்படும்.

சுகாதார அமைச்சின் அனுமதி இல்லாமல் வைத்தியர்களுக்கு வீசா வழங்க வேண்டாம் என இலங்கையில் உள்ள தூதுவராலயங்களுக்கு அறிவிக்கவும், வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போது விமான நிலையத்தில் அவர்களின் விடுமுறை தொடர்பான பத்திரங்களை ஆராயுமாறும் குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்திற்கு அறிவிக்க அவதானம் செலுத்தியுள்ளோம் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »