Our Feeds


Sunday, November 13, 2022

ShortNews Admin

மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகன் யோஷித ராஜபக்ஷ குறித்த விசாரனைகள் ஆரம்பம்.



யோசித ராஜபக்சவின் நடவடிக்கைகள் குறித்து  இலஞ்ச ஊழல் குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.


முன்னாள்பிரதமரின் பிரதானியாக விளங்கிய யோசித ராஜபக்ச வெளிநாட்டு பயிற்சிக்காக எவ்வாறு தெரிவு செய்யப்பட்டார் என்பது குறித்தே விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

இலங்கை கடற்படையில் பணியாற்றியவேளை அவர் எவ்வாறு வெளிநாட்டு பயிற்சிக்காக தெரிவு செய்யப்பட்டார் என்பது குறித்தே விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

வெளிநாட்டு பயிற்சிக்கு கடற்படையினரை தெரிவு செய்பவர்களை இலஞ்ச ஊழல் குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழு விசாரணை  செய்யவுள்ளது.

எனினும் இந்த விசாரணைகள் குறித்து அதிகாரிகள் கனத்த மௌனம் காக்கின்றனர்.

யோசித ராஜபக்ச பிரிட்டிஸ் கடற்படையின் டார்ட்மவுத்தில் பயிற்சி பெற்றிருந்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »