யாருமற்ற வீடு ஒன்றுக்குள் பெண் ஒருவரால் விட்டுச் செல்லப்பட்டதாக கூறப்படும் இரண்டு வயது மற்றும் மூன்று வயதுடைய இரண்டு பெண் குழந்தைகள் நேற்று சனிக்கிழமை (12) பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த இரு பிள்ளைகளின் தாயாரே இவர்களை இவ்வாறு விட்டுச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
எவ்வாறாயினும், அம்பலாங்கொடை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் இரண்டு பிள்ளைகளின் பெற்றோரும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது பொலிஸ் பாதுகாப்பில் உள்ள இந்த இரண்டு பிள்ளைகளையும் சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்க நீதிமன்றில் அனுமதி பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த இரண்டு பிள்ளைகளுக்குமான அனைத்து தேவைகளும் பொலிஸ் அதிகாரிகளினால் நிறைவேற்றப்படடு வருவது குறிப்பிடத்தக்கது.