கடந்த ஒக்டோபர் மாதத்தில் வர்த்தக பொருள் ஏற்றுமதி வருமானமானது, ஆயிரத்து 94 மில்லியன் அமெரிக்க டொலராக குறைவடைந்துள்ளதென ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, ஏற்றுமதி வருமானமானது 8.18 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
ஆடை, துணி, தேயிலை, இறப்பர், சிறு ஏற்றுமதி பயிர்கள் மற்றும் மீன்பிடித்துறையின் ஏற்றுமதி வருமானம் குறைவடைந்தமை இதற்கு பிரதான காரணமாகும்.
அதேநேரம், உலகளாவிய நெருக்கடி பிரதான உற்பத்திகளின் ஏற்றுமதி வருமானத்தை பாதித்துள்ளது.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்தில் ஆடை மற்றும் புடைவை ஏற்றுமதியில் 509 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதோடு, இந்த வருடத்தில் ஒக்டோபர் மாதமளவில் 441 மில்லியன் அமெரிக்க டொலர் ஈட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து அமெரிக்காவுக்கு அதிகளவு ஏற்றுமதிகள் இடம்பெற்றுள்ளதுடன், அதன்மூலம் கடந்த ஒக்டோபர் மாதத்தில் 239.98 மில்லியன் டொலர் வருமானமாக கிடைக்கப்பெற்றுள்ளது.