மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த நாட்டின் பொருளாதாரம் தற்போது மத்திய வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்ட நிதிக் கொள்கைகள் காரணமாக ஓரளவு ஸ்திரமான நிலையில் காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
நாட்டில் ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி மற்றும் பணவீக்கம் அதிகரிப்பதற்கு பல காரணங்கள் முக்கியமாக பங்களித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நாடு இவ்வாறான பொருளாதார நெருக்கடிக்குத் திரும்புவதைத் தடுப்பதற்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு சீர்திருத்தங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.