எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் எரிபொருள், மின்சாரம், ரயில் மற்றும் பஸ் கட்டணங்கள் 15 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திற்கு அமைய, இந்த கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
எனினும், வரி திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, இந்த தீர்மானத்தை எடுப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக வரவு செலவுத்திட்ட யோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் அறவிடப்படும் ஏனைய கட்டணங்களும் 20 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, திருமண பதிவு கட்டணம், நிறுவன பதிவு கட்டணம், அதிவேக வீதி கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களும் அதிகரிக்கப்படவுள்ளன.
நன்றி: TC