நோர்வேயில் வசிக்கும் இலங்கையர் ஒருவரை ஏமாற்றி 120 மில்லியன் ரூபாவை ஏமாற்றிய இரண்டு பெண்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம், நாவந்துறை பகுதியை சேர்ந்த 30 மற்றும் 34 வயதுடைய சகோதரிகள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவர்கள் இருவரையும் நேற்று கைது செய்து பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதன்போது கைது செய்யப்பட்ட இருவரும் டிசம்பர் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்