இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் சாமிக்க கருணாரத்னவிற்கு ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்ட கிரிக்கட் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற T20 உலகக்கிண்ண கிரிக்கட் தொடரின் போது அவர் கிரிக்கட் வீரர்களுக்கான உடன்படிக்கையை மீறி செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக 3 பேர் கொண்ட குழு நடத்திய விசாரணைகளில் அவர் மீதான குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு உரிய தண்டனையை வழங்குமாறு குறித்த குழு பரிந்துரைத்துள்ளது.
இதன்படி ஒரு ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டு, சகல வகையான கிரிக்கட் போட்டிகளிலும் பங்கேற்க அவருக்கு ஒரு வருடத்துக்கு தடை விதிக்கப்பட்டதுடன், 5000 அமெரிக்க டொலர்கள் அபராதமாகவும் விதிக்கப்பட்டுள்ளது.