Our Feeds


Tuesday, November 22, 2022

ShortNews Admin

மலித் ரணசிங்க என்னிடம் பாலியல் லஞ்சம் கோரினார் - ஷாமிகா மீடியா முன்னால் பரபரப்பு குற்றச்சாட்டு!



மியன்மாரியில்   நடைபெற்ற Mrs Grand International 2022 போட்டியில் பங்கேற்பதற்கு முன்னர் அந்த போட்டியின் ஏற்பாட்டாளரான  மலித் ரணசிங்க தன்னிடம் பாலியல் இலஞ்சம் கோரியதாக  இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தவிருந்த  ரசாங்கி ஷாமிகா கருணாரத்ன தெரிவித்துள்ளார். அந்த நபர் தன்னுடன் கஞ்சா குடிக்க வருமாறு வற்புறுத்தியதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.


அவரது இந்தக் கோரிக்கை தனக்குப் பிடிக்காததால், இந்தப் போட்டியைப் பிரதிநிதித்துவப்படுத்தவும் தேவையான  பணிகளை முன்னெடுக்கவும் மியான்மருக்குச் செல்லத் தேவையான பணத்தைத் தரவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக இறுதிப் போட்டியில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு தமக்கு கிடைக்கவில்லை எனவும் உலகின் இருபத்தைந்து நாடுகளுக்கு முன்னால் இலங்கையின் பெருமை மாத்திரம் குழிபறிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

நேற்று (21) கொழும்பில் தமக்கு நேர்ந்த அநீதி தொடர்பில் ஊடகங்களுக்கு தெரிவிக்கும்  ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ரசாங்கி ஷாமிகா கருணாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »