பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்த, இலங்கைக் கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு சிட்னி நீதிமன்றமொன்று இன்று பிணை வழங்கியது.
கடுமையான நிபந்தனைகளுடனேயே தனுஷ்க குணதிலக்கவுக்கு நீதின்றம் பிணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
150,000 அவஸ்திரேலிய டொலர் பிணையில் தனுஷ்க குணதிலக்கவுக்கு பிணை வழங்கப்பட்டது.
அவர் மீதான வழக்க விசாரணை எதிர்வரும் ஜனவரி 12 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், அவர் அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேறுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தனுஷ்கவின் கடவுச்சீட்டையும் நீதிமன்றில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது.
தினமும் இரவு 9 மணி முதல் காலை 6 மணிவரை வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.