யாழ். வடமராட்சி பகுதியில் நேற்று (20) ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி பகுதியை சேர்ந்த யுவதி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியை சேர்ந்த 18 வயதான ஆனந்தராஜா அலன்மேரி என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறை, கற்கோவளம் பகுதியில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்கு சென்ற குறத்த யுவதி, மேலும் நால்வருடன் கடலில் நீராடியுள்ளார்.
பின்னர் கற்கோவளம் பகுதியில் உள்ள நீர் நிலை ஒன்றிலும் இறங்கி நீராடியுள்ளனர். அதன் போது, குறித்த யுவதி நீரில் மூழ்கி காணாமல் போன நிலையில், யுவதியுடன் சென்றவர்கள் அவல குரல் எழுப்பியதை அடுத்து அருகில் இருந்த இராணுவ முகாமை சேர்ந்த இராணுவத்தினர் அங்கு விரைந்து யுவதியை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
இதன்போது அங்கு யுவதி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொர்பில் யாழ். பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.