முன்னாள் அமைச்சரான நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பிலவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்கியது என்று கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (21) உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலாலே முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சமர்ப்பித்த பிரேரணை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி இனோகா பெரேரா, தமது கட்சிக்காரர் யாத்திரைக்காக இந்தியா செல்ல விரும்புவதாகவும், தற்போதைய பயணத்தடையை இம்மாதம் 23ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை இடைநிறுத்துமாறும் நீதிமன்றில் கோரினார்.
குறித்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், குறித்த காலத்துக்குள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடையை நீக்குமாறு உத்தரவிட்டார்.