நாகவில-ஆதிகாம பிரதேசத்தில் வீடொன்றில் இரும்பு கம்பியால் குத்தி நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இக்கொலை நேற்று (20) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 36 வயதுடைய ஆதிகம பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
உயிரிழந்தவர் தனது வீட்டில் மற்றுமொரு குழுவினருடன் மதுபானம் அருந்திக் கொண்டிருந்த போது, அந்த இடத்தில் இருந்த நபரே இந்தக் கொலையைச் செய்துள்ளார்.
சம்பவத்தை அடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக தப்பிச் சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் நடந்த இடத்தில் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கம்பியை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
கொலையை செய்த சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பல்லம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.