கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் இலங்கையில் சுமார் 4000 காச நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக காச நோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய வேலைத்திட்டத்தின் சமூக வைத்திய நிபுணர் ஓனலி ராஜபக்ஸ தெரிவித்தார்.
அவர்களில் 20 தொடக்கம் 25 வீதமானவர்கள் கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மூன்றில் இரண்டு வீதமானோர் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் பதிவாகியுள்ளதாக சமூக வைத்திய நிபுணர் ஓனாலி ராஜபக்ஸ மேலும் தெரிவித்தார்