இந்த நாட்டில் கட்டுமானத் துறையில் தேசிய கொள்கை ஒன்று இருக்க வேண்டும் என்று ஆளுங் கட்சியின் பிரதம அமைப்பாளர், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நேற்று (29) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதற்காகவே தற்போதைய ஜனாதிபதி செயற்படுகிறார். அதற்கான தேசிய சபை பிரதமர் தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் குறிப்பிட்டார்.கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது தேசிய கொள்கையொன்று தயாரிக்கப்பட இருந்தது ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை, அது நிறைவேறும் போது தற்போதைய அரசாங்கம் ஆதரிக்கும் என்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளைகள் 27 (2) இன் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பதிலளிக்கும் போதே அவர் நேற்று (29) இதனைத் தெரிவித்தார்.