250 கிராம் கேரளா கஞ்சாவினை கடத்திய சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
திங்கட்கிழமை (21) இரவு விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சம்மாந்துறை பொலிஸ் எல்லைக்குட்பட்ட வீரமுனை பகுதியை சேர்ந்த 52 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு கைதான சந்தேக நபரிடம் இருந்து 250 கிராம் பொதி செய்யப்பட்ட கேரளா கஞ்சா விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பின்னர், கைது செய்யப்பட்ட நபர் சான்று பொருட்களுடன் சம்மாந்துறை பொலிஸாரிடம் நீதிமன்ற நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.