தேசிய கீதத்தை உறக்க பாடாமையினால் மாணவர் ஒருவர் கடுமையாக தண்டிக்கப்பட்டுள்ளார்.
அவிசாவளை – ஹங்வெல்ல பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றிலேயே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
பாடசாலை ஆரம்பிக்கப்படும் போது தேசிய கீதத்தை மாணவர்கள் பாடிக்கொண்டிருந்த வேளையில் சத்தமாக பாடுமாறு தெரிவித்து, ஆசிரியர் ஒருவர் தலைப் பகுதியில் தாக்கியுள்ளார் என மாணவரின் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்
ஆசிரியரால் தாக்கப்பட்ட மாணவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
குறித்த முறைப்பாட்டுக்கு அமைய ஆசிரியர் தற்போது பொலிஸாரின் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.