Our Feeds


Sunday, November 13, 2022

News Editor

யாழில் ஹெரோயினுடன் இருவர் கைது


 

யாழ். அளவெட்டி நரியிட்டான் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.

விசேட பொலிஸ் ரோந்து நடவடிக்கையின் போதே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 20 மற்றும் 21 வயதுடைய இளைஞர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதன்போது குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 45 மற்றும் 47 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்ட நிலையில், சந்தேக நபர்களை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது குறித்த இருவருக்கும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »