இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் குடியுரிமை தொடர்பான ஆவணங்களை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு குடிவரவு கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றினால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த வழக்கினை டிசம்பர் 12ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனவே, குறித்த தினத்தில் நீதிமன்றில் முன்னிலையாகி இது தொடர்பான காரணிகளை தெரிவிக்குமாறு டயனா கமகேவுக்கு நீதிமன்றம் அறிவித்தல் விடுத்துள்ளது.