கடும் குளிர், ரஸ்யாவின் தாக்குதல்களால் ஏற்பட்ட மின்துண்டிப்பு காரணமாக உருவாகியுள்ள இருள் போன்றவற்றையும் மீறி உக்ரைன் இந்த குளிர்காலத்தை தாக்குப்பிடிக்கும் என தெரிவித்துள்ள அந்த நாட்டின் முதல்பெண்மணி ஒலேனா ஜெலென்ஸ்கா உலகின் கருத்துக்களின் யுத்தத்தில் தொடர்ந்தும் தனது நாடு ஈடுபடும் எனவும் தெரிவித்துள்ளார்.
பிபிசிக்கு கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் வெற்றியின்றி சமாதானம் சாத்தியமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து பிபிசி மேலும் தெரிவித்துள்ளதாவது
நாங்கள் மாடிகளை கொண்ட நகரத்தில் சந்தித்தோம் அங்கு குளிர்காலத்தின் குளிர் எங்களை தாக்கியது.
ரஸ்யா தொடர்ந்தும் உக்ரைனின் மின்கட்டமைப்புகளை இலக்குவைப்பதால் மின்துண்டிப்பிற்கு மத்தியில் இந்த நகரத்தின் கட்டிடங்கள் இருண்டவையாக குளிர்மிகுந்தவையாக காணப்படுகின்றன.
ரஸ்யாவின் மிகதீவிரமான கடுமையான தாக்குதல்களை எதிர்த்து தொடர்ந்தும் களத்தில் நிற்பதற்காக உக்ரைன் மக்கள் உலகின் பாராட்டுகளை பெற்றுள்ளனர்.
ஆனால் இது துணிச்சலிற்கான வலிமிகுந்த மற்றுமொரு சோதனை.
ஆனால் நாங்கள் இதனை எதிர்கொள்வதற்கு அனுபவிப்பதற்கு தயார் என்கின்றார் ஒலேனா ஜெலென்ஸ்கா.
உக்ரைன் தலைநகரில் கடும் பாதுகாப்புகளுடன் மண்மூட்டைகள் அடுக்கப்பட்ட கட்டிடமொன்றில் உரையாடுவதற்காக நாங்கள் அமர்ந்தவேளை அவர் இதனை தெரிவித்தார்.
நாங்கள் மிக மோசமான பல சவால்களை சந்தித்துள்ளோம்,பலர் கொல்லப்பட்டதை பார்த்திருக்கின்றோம்,பெருமளவு அழிவுகளை சந்தித்துள்ளோம்,நாங்கள் சந்தித்த விடயங்களில் மின்துண்டிப்பு என்பதே மிக மோசமான விடயமில்லை என அவர் தெரிவித்தார்.