Our Feeds


Thursday, November 24, 2022

ShortNews Admin

VIDEO: முஸ்லிம்களுக்கு எதிராக அரசாங்கம் அமைத்தால் இலங்கையை சர்வதேசம் எவ்வாறு ஏற்றுக்கொள்ளும்? - அனுரகுமார கேள்வி



(ஏ.ஆர்.ஏ.பரீல்)


முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராக அர­சாங்கம் அமைத்தால் சர்வதேச நாடுகள் இலங்கையை எவ்வாறு ஏற்­றுக்­கொள்ளும். கருத்­தடை, கொத்து ரொட்டி, கருத்­தடை டாக்டர், கருத்­தடை ஆடை என்­கி­றீர்கள். என்­னதான் நீங்கள் செய்­ய­வில்லை? ஏனைய இன மக்கள் மீது குரோதம், பகை­மையை ஏற்­ப­டுத்தும் அர­சாங்­க­மொன்று இருந்தால் உலகில் யார் எமது நாட்டை ஏற்­றுக்­கொள்­வார்கள் என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான அநுர குமார திசா­நா­யக்க தெரி­வித்தார்.


2023 ஆம் ஆண்­டுக்­கான வரவு– செல­வுத்­திட்­டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்; இதனால் இது கரு­மை­யான நாடு. வெளி­நாட்­டுக்கு செல்ல விசா­வொன்று வழங்­கப்­ப­டு­வ­தில்லை. அவ்­வாறு சென்றால் திரும்பி வர­மாட்­டார்கள். பொது நல­வாய நாடு­களின் விளை­யாட்டு போட்­டியில் கலந்து கொள்­வ­தற்கு சென்ற எமது தேசிய வீராங்­க­னைகள், வீரர்கள், பத்துப் பேர் அங்கு தப்­பி­யோடி விட்­டார்கள். அவர்கள் மீண்டும் எமது நாட்­டுக்கு திரும்பி வர­வில்லை.


எமது நாட்டின் தேசிய வீரர்கள் நினைக்­கி­றார்கள் நாம் பதக்­கங்­களை கழுத்தில் மாட்­டிக்­கொண்­டி­ருப்­பதில் பய­னில்லை. வீழ்ச்­சி­ய­டைந்­துள்ள பொரு­ளா­தா­ரத்தைக் கொண்ட நாட்டில் தாம் வாழ்­வதை விரும்­ப­வில்லை. தாம் இந்த நாட்­டை­விட்டு வெளி­யே­றி­வி­டவே விரும்­பு­கி­றார்கள். இந்­நாட்டில் அவர்­க­ளுக்கு நல்­லதோர் எதிர்­காலம் கிடைக்­காது என நினைக்­கி­றார்கள்.


எமது நாட்­டுக்கு படகில் வருகை தர வேண்டாம் என்று இலங்­கை­யர்­க­ளுக்கு சில நாடுகள் கூறு­கின்­றன. இதுதான் எமது நாட்டின் நிலைமை. இவ்­வா­றான நிலையில் நாம் எவ்­வாறு ஏனைய நாடு­க­ளுடன் இரா­ஜ­தந்­திர உற­வைப்­பேண முடியும்.


எமது நாட்டில் ஊழல்கள் மலிந்து காணப்­ப­டும்­போது, சர்­வ­தேச ரீதியில் நிதி மோச­டிகள் இடம் பெற்­றுள்ள நிலையில் எமது பிரதி விம்பம் கடு­மை­யா­ன­தா­கவே இருக்­கி­றது. இந்­நி­லையில் சர்­வ­தேச நாடு­க­ளுடன் எம்மால் இரா­ஜ­தந்­திர உற­வு­களை எவ்­வாறு பலப்­ப­டுத்த முடியும்.


எமது பொரு­ளா­தா­ரத்தில் மூன்று விட­யங்கள், முக்­கி­யத்­துவம் பெற வேண்டும். பொருட்­களின் உற்­பத்­தியும் சேவையும் அதி­க­ரிக்­கப்­ப­ட­வேண்டும். பொரு­ளா­தாரம் கொழும்பை மையப்­ப­டுத்தி மாத்­திரம் இருக்­கக்­கூ­டாது. இது கிரா­மங்­க­ளுக்கு பர­வ­லாக்­கப்­பட வேண்டும். புதிய பொரு­ளா­தார அபி­வி­ருத்­தித்­திட்­டங்கள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும்.


இன்று நாம் எதிர்­நோக்­கி­யுள்ள நெருக்­க­டி­க­ளி­லி­ருந்து மீண்டும் நாடு விடு­தலை பெறு­வ­தற்கும், நாட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் மக்கள் ஆணையுடனான புதிய அரசாங்கமொன்று நிறுவப்பட வேண்டும். இதன்மூலமே நாடும் நாட்டு மக்களும் மீட்சி பெறுவார்கள். இதுவே நாட்டுமக்களது எதிர்பார்ப்புமாகும் என்றார்.- Vidivelli


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »