அமெரிக்காவின் ABC தொலைக்காட்சி நடத்திய கேள்வி-பதில் ரியாலிட்டி போட்டியொன்றில், மில்லியன் கணக்கான டொலர்களை வெல்வதற்கான கேள்வியொன்றில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பான கேள்வியொன்று கேட்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன.
அதற்கமைய, 2022ஆம் ஆண்டில் மக்கள் போராட்டத்தால் ஒரு நாட்டின் ஜனாதிபதி பதவி விலகியதாகவும், இந்த ஜனாதிபதி இந்தியப் பெருங்கடலைக் கடந்து மாலத்தீவுக்கு தப்பிச் சென்றதாகவும், அந்த ஜனாதிபதி எந்த நாட்டைச் சேர்ந்தவர் எனவும் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
இதன்போது, போட்டியாளர்களில் இருவர் இலங்கை என்று பதிலளித்ததாகவும், மற்ற போட்டியாளர்களால் அதற்கு பதிலளிக்க முடியவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.
குறித்த நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றிலேயே இந்தக் கேள்வி கேட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.