ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் ட்விட்டர் செயலியை நீக்கினால், அதற்கு மாற்றாக ஸ்மார்ட்போன் தயாரிப்பில் ஈடுபடுவேன் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்களின் நடைமுறைகளுக்கு உட்பட்டு, ட்விட்டரில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என அந்நிறுவனங்கள் ஆய்வு செய்து வருகின்றன.
இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த எலான் மஸ்க், ட்விட்டர் செயலியை ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் நீக்காது என நம்புவதாகவும், வேறு வழி இல்லை என்றால், மாற்று ஸ்மார்ட்போன் உற்பத்தி செய்வேன் என்றும் கருத்து பதிவிட்டுள்ளார்.