1 மில்லியனுக்கும் அதிகமான பாடசாலை மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நன்கொடையாளர்களின் உதவியுடன் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்டத்தில் தற்போது இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் 26% பாடசாலை மாணவர்களுக்கு தற்போது காலை உணவு வழங்கப்படுவதாகவும் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் தெரிவித்துள்ளார்.