Our Feeds


Saturday, November 12, 2022

RilmiFaleel

பலம் வாய்ந்த ராஜ்ஜியங்களுக்கு இடையேயான முரண்பாடுகளில் தலையிடும் வாய்ப்பு இல்லை - ஜனாதிபதி.


உலகின் பலம் பொருந்திய நாடுகளுக்கு இடையிலான முரண்பாடுகள் மற்றும் போட்டிகளில் தலையிடுவதற்கு இலங்கைக்கு எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி, தற்போதைய பின்னணியில் இந்து சமுத்திரப் பிராந்தியமானது உயர் அரசியல் மற்றும் பொருளாதார பெறுமதியைப் பெற்றுள்ளதாக குறிப்பிட்டார்.

இதேவேளை, சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் முதுகலைப் பட்டதாரிகளில் 2022ஆம் ஆண்டுடன் தொடர்புடைய 1619 இளங்கலை பட்டமளிப்பு விழா பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »