எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்காக மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட முச்சக்கர வண்டிகளை பதிவு செய்யும் வேலைத்திட்டம் தோல்வியடைந்துள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை முச்சக்கரவண்டிப் பதிவுக்காக கட்டணம் வசூலிக்கத் திட்டமிட்டுள்ளதால், பல முச்சக்கரவண்டி சாரதிகள் அதற்கு ஆதரவளிப்பதில்லை எனத் தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் சுதில் ஜயருக் குறிப்பிட்டார்.
முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்காக, அண்மையில் பதிவு செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
மேல்மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையில் முச்சக்கரவண்டிகள் உரிய முறையில் பதிவு செய்யப்பட வேண்டும் எனவும், பதிவு செய்ததன் பின்னர் முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 10 லீற்றராக அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனவே, பதிவுக் கட்டணம் அறவிடுவதற்கு மாகாண சபை தீர்மானித்துள்ளதால், பெரும்பாலான முச்சக்கரவண்டி சாரதிகள் இந்த வேலைத்திட்டத்தில் இணைய மறுத்துள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்தார்.