Our Feeds


Thursday, November 17, 2022

ShortNews Admin

அபுதாபியில் அடைத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை பெண்கள் -ஆள்கடத்தல் கும்பல் பற்றி வெளியான புதிய தகவல்



அபுதாபியில் சிக்குண்டுள்ள இலங்கை பெண்கள் இலங்கையை சேர்ந்த பிரபல தம்பதிகளிடம் உதவி கோரியுள்ளதை தொடர்ந்து ஆள்கடத்தல் கும்பல் குறித்த தகவல்கள் அம்பலமாகியுள்ளன.


இலங்கையின் பிரபலமான தம்பதியினரிடம் பணியாளாக பணியாற்றிய பெண்ணொருவர் ஓமானிற்கு பணிப்பெண்ணாக செல்வதாக தெரிவித்து சென்றுள்ளார்.

சில நாட்களின் பின்னர் தனது மகளை தொடர்புகொண்டுள்ள அவர் தன்னையும் 16 பெண்களையும் அறையொன்றில் அடைத்துவைத்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

தன்னுடைய கடவுச்சீட்டு கையடக்தொலைபேசியையும் அறையில் உள்ள ஏனைய பெண்களினது கடவுச்சீட்டுகளையும் கையடக்க தொலைபேசகளையும் பறித்து வைத்துள்ளனர் எனவும் அவர் தனது மகளிற்கு தெரிவித்துள்ளார்.

மறைத்து வைத்திருந்த தொலைபேசியை பயன்படுத்தி அவர் தனது மகளை தொடர்புகொண்டுள்ளார்.

மகள் பிரபல தம்பதியினரை தொடர்புகொண்டு இதனை தெரிவித்துள்ளார்.

இந்த பெண்களில் அனேகமானவர்கள் ஹட்டனை சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.

மகளின் தகவலை தொடர்ந்து வட்ஸ்அப்பினை பயன்படுத்தி தேடியவேளை குறிப்பிட்ட பெண்  அபுதாபியில் இருப்பது தெரியவந்துள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அந்த தம்பதியினர் வட்ஸ் அப்பினை பயன்படுத்தி அந்த பெண்ணின் ஆவணங்களை பெற்றுக்கொண்டுள்ளனர் இந்த ஆவணங்களை ஆராய்ந்தவேளை குறிப்பிட்ட பெண் அபுதாபிக்கு விசிட் விசாவில் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

ஹட்டனில் உள்ள தரகர் மூலம் கட்டுகஸ்தோட்டையில் உள்ள முகவர் குறிப்பிட்ட பெண்ணை அனுப்பியுள்ளமையும் தெரியவந்துள்ளது.

குறிப்பிட்ட முகவர் நிலையம் மருதானையில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்திற்கு குறிப்பிட்ட பெண்ணின் விபரங்களை அனுப்பியமையும் அவர்கள் குறிப்பிட்ட பெண்ணை ஐக்கிய அரபு இராச்சியத்தில் பணிபுரிவதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தில் பணிபுரிந்தமையும் தெரியவந்துள்ளது.

பலர் இந்த விடயத்தில் ஈடுபட்டுள்ளதால் முக்கிய நபரை கண்டுபிடிக்கமுடியவில்லை என இந்த விடயம் குறித்து ஆராய்ந்து வரும் தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »