கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சீனாவில் உள்ள மிகப்பெரிய ஐபோன் தொழிற்சாலையில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய சீனாவில் உள்ள செங்சவு மாகாணத்தில் கொரோனா பரவல் காரணமாக தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இங்கு அமைந்துள்ள மிகப்பெரிய ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் பணிபுரியும் 2 இலட்சம் ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ள ஊழியர்களுக்கு முறையான ஊதியம் வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுப்பி வந்தனர்.
இந்நிலையில், தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்த காவலர்களை தள்ளிவிட்டு வெளியே வந்த ஊழியர்கள் இன்று (23) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து, போராட்டத்தை கலைக்க பொலிஸார் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.