பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். சர்வ கட்சி அரசாங்கத்தை அமைக்கும் நோக்கத்திற்கு பிரதான ஆளும் கட்சி தடையாக செயற்பட்டதாலேயே சர்வ கட்சி அரசாங்கத்தை அமைக்கும் முயற்சி முழுமையாக தடைப்பட்டது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (நவ. 18) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நான்காவது நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.