செந்தூரன் பிரதீபன்
சவுதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாக சென்ற தனது மனைவியினை மீட்டுத்தருமாறு கோரி இளம் கணவர், யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கன்சீயூலர் அலுவலகத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அம்பாள் நகர் சாந்தபுரம் கிளிநொச்சி சேர்ந்த வடிவேல் லிங்கேஷ்வரன் என்ற இளம் குடும்பஸ்தர் இவ்வாறு தனது மனைவியை மீட்டுத் தருமாறு கூறுகிறார்.
திருமணம் செய்து ஒன்றரை வருடங்கள் கடந்துள்ளது. பொருளாதார நெருக்கடி காரணமாக ஏஜென்சி மூலம் தனது மனைவி மத்திய கிழக்கு நாடான சவுதி அரேபியாவிற்கு பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.
தற்போது அங்கு பல்வேறு துன்புறுத்தல்கள் ஒழுங்கான உணவு வழங்கப்படாமை போன்ற பல்வேறு துயரங்களை எதிர்கொண்டு வருவதுடன், குடும்பத்துடன் தொலைபேசியில் உரையாடுவதற்கும் அனுமதி மறுக்கப்படுவதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்ததாக கணவர் தெரிவித்தார்