Our Feeds


Monday, November 21, 2022

News Editor

ஜோ பைடனின் பேத்திக்கு வெள்ளை மாளிகையில் திருமணம்


 

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் பேத்தி நவோமி பைடனின் திருமணம் வெள்ளை மாளிகையில் எளிமையான முறையில் நேற்று முன்தினம் நடந்தது

இவர் ஜோ பைடனின் மூத்த மகனான ஹன்டர் பைடன் மற்றும் அவரின் முன்னாள் மனைவி கேத்தலின் பூலேவுக்கு பிறந்தவர். 28 வயதான நவோமி பைடனும், சட்டக்கல்லூரி மாணவரான 24 வயதான பீட்டர் நீல்லும் காதலித்து வந்தனர்.

இந்நிலையில், இவர்களின் திருமணம் வெள்ளை மாளிகையில் எளிமையான முறையில் நேற்று முன்தினம் நடந்தது. ஜனாதிபதி ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன் தலைமையில் நடைபெற்ற திருமணத்தில் உறவினர்கள், நண்பர்கள் என சுமார் 250 பேர் கலந்து கொண்டனர்.

பதவியில் இருக்கும் ஜனாதிபதி பைடனின் பேத்தி வெள்ளை மாளிகையில் மணமகளாக நடந்து செல்லும் முதல் நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »