Our Feeds


Thursday, November 24, 2022

ShortNews Admin

போதைப்பொருள் பாவனையிலிருந்து முஸ்லிம் இளைஞர்களை பாதுகாப்பதற்கு பள்ளிவாசல்கள் ஒத்துழைக்க வேண்டும் - அமைச்சர் விதுர விக்ரமநாயக்க



(ஏ.ஆர்.ஏ.பரீல்)


நாட்டில் போதைப்­பொருள் பாவ­னையில் முஸ்லிம் சமூ­கத்தைச் சேர்ந்­த­வர்­கள் கணி­ச­மா­க பாதிக்­கப்­பட்­டுள்­ளார்கள். போதைப் பொரு­ளி­லி­ருந்து முஸ்லிம் இளை­ஞர்­களை மீட்­டெ­டுப்­ப­தற்கு பள்­ளி­வா­சல்கள் ஒத்­து­ழைக்க வேண்டும். நாடெங்­கு­முள்ள பள்­ளி­வா­சல்­களில் போதைப்­பொருள் தொடர்­பான விழிப்­பு­ணர்வு நிகழ்ச்­சிகள் ஏற்­பாடு செய்­யப்­ப­ட­வேண்டும் என புத்­த­சா­சன, சமய மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சர் விதுர விக்­கி­ர­ம­நா­யக்க தன்னைச் சந்­தித்த அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. அமைப்­பிடம் வேண்­டுகோள் விடுத்தார்.


அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. அமைப்பு கடந்­த­வாரம் அமைச்சர் விதுர விக்­கி­ர­ம­நா­யக்­கவை அமைச்சின் அலு­வ­ல­கத்தில் சந்­தித்து முஸ்லிம் சமூ­கத்தின் சம­கால விவ­கா­ரங்கள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டி­யது. சந்­திப்பில் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. யின் தேசிய தலைவர் இஹ்ஸான் ஏ.ஹமீட், வை.டப்­ளியு. எம்.ஏ.யின் தலைவி பவாசா தாஹா, வை.எம்.எம்.ஏ. யின் முன்னாள் தலைவர் சஹீட் எம்.ரிஸ்மி மற்றும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் இப்­றாஹிம் அன்ஸார் ஆகி­யோர் கலந்து கொண்­டி­ருந்­தனர்.


சந்­திப்­பின்­போது அமைச்சர் விதுர விக்­கி­ர­ம­நா­யக்க தொடர்ந்தும் கருத்துத் தெரி­விக்­கையில்; ‘நாட்டில் போதைப்­பொ­ருளை ஒழிப்­ப­தற்கு அனைத்து மதஸ்­த­லங்­களும் ஒத்­து­ழைப்பு நல்க வேண்டும். பள்­ளி­வா­சல்கள் மாத்­தி­ர­மல்ல பெரும்­பான்மை சமூக இளை­ஞர்­க­ளுக்கு பன்­ச­லை­க­ளிலும், தமிழ் சமூக இளை­ஞர்­க­ளுக்கு கோயில்­க­ளிலும் விழிப்­பு­ணர்வு ஊட்­டப்­ப­ட­வேண்டும். பள்­ளி­வா­சல்கள் மூலமே முஸ்லிம் இளை­ஞர்­களை நேர்­வ­ழிப்­ப­டுத்த முடியும். இந்த செயற்­திட்­டத்­திற்கு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் மற்றும் வை.எம்.எம்.ஏ.போன்ற அமைப்­புகள் ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும் என்றார்.


குர்ஆன் மத்­ர­ஸாக்கள் மற்றும் அர­புக்­கல்­லூ­ரி­களின் பாடத்­திட்­டங்கள், இஸ்­லா­மிய பாட­நூல்­களில் திருத்­தங்கள், இஸ்­லா­மிய நூல்கள், குர்ஆன் இறக்­கு­மதி தொடர்­பிலும் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. இவ்­வி­வ­கா­ரங்கள் தொடர்பில் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. அமைப்பு கடந்த காலங்­களில் முன்­னெ­டுத்த செயற்­பா­டுகள் தொடர்­பி­லான ஆவ­ணங்கள் அமைச்­ச­ரிடம் கைய­ளிக்­கப்­பட்­டது.


நாடெங்கும் 25 மாவட்­டங்­களில் 169 வை.எம்.எம்.ஏ. கிளைகள் இயங்கி வரு­வ­தா­கவும் இந்த வலை­ய­மைப்பின் ஊடாக பள்­ளி­வா­சல்­க­ளுடன் இணைந்து போதைப்­பொ­ரு­ளி­லி­ருந்து இளை­ஞர்­களைப் பாது­காப்­ப­தற்கு வை.எம்.எம்.ஏ. ஒத்­து­ழைக்க தயா­ராக உள்­ள­தா­கவும் வை.எம்.எம்.ஏ.யின் முன்னாள் தலைவர் அமைச்­ச­ரிடம் தெரி­வித்தார். இது தொடர்­பாக செயற்­றிட்­ட­மொன்­றினைத் தயா­ரித்து இவ்­வ­ருட இறு­திக்குள் அமைச்­ச­ரிடம் கைய­ளிப்­ப­தா­கவும் அவர் கூறினார்.


இதே­வேளை, அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவை ஐ.நாவின் உல­களா­விய நிதி­யத்தின் (Global Fund) உத­வியின் கீழ் கண்டி மாவட்­டத்தில் போதைப்­பொருள் ஒழிப்பு மற்றும் எயிட்ஸ் நோய் தொடர்­பான விழிப்­பூட்­டல்­களை மக்கள் மத்­தியில் வழங்கி வரு­வ­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டது.


கண்டி வைத்­தி­ய­சா­லையில் இக்­கா­ரி­யா­லயம் இயங்­கி­வ­ரு­கி­றது. இக்­கா­ரி­யா­ல­யத்தின் கீழ் இப்­ப­ணியில் 25 பேர் ஈடு­பட்­டுள்­ளார்கள். இவர்­க­ளுக்­கான கொடுப்­ப­னவு ஐ.நா.வின் உல­க­ளா­விய நிதி­யத்தின் மூலம் வழங்­கப்­ப­டு­கி­றது. குறிப்­பிட்ட 25 பேரில் 20 பேர் போதைப்­பொருள் பாவ­னை­யி­லி­ருந்தும் மீட்­டெ­டுக்­கப்­பட்­ட­வர்­க­ளாவர். இக்குழு போதைப்பொருள் பாவனையாளர்களை இனங்கண்டு அவர்களுக்கு விழிப்பூட்டும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து அவர்களை நேர்வழிப்படுத்துகிறது. போதைப்பொருள் பாவனையிலிருந்தும் மீட்டெடுக்க முடியாதவர்கள் அரசின் புனருத்தாபன முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர் என்றும் அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது.- Vidivelli

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »