ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணைந்துகொண்டதாக கூறப்படும் சுயாதீனமாக செயற்படும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணைந்துகொள்ளவில்லையென தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் கூட்டணியில் இணைந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
எனினும் தாங்கள் அந்த கூட்டணியில் இணையவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுதர்ஷினி பெர்ணாண்டோ புள்ளே மற்றும் பிரியங்கர ஜயர்த்ன ஆகியோர் அறிவித்துள்ளனர்.
தாங்கள் தொடர்ந்தும் நாடாளுமன்றத்தில் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களாகவே செயற்படவிருப்பதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
எனினும் அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட நான்கு பேர் சஜித்துடன் இணைந்துள்ளமை உறுதிசெய்யப்படது.