போதைப்பொருள் வர்த்ததகர் ஒருவரை கூரிய ஆயுதங்களால் தாக்கிய, ஒருங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை தெற்கு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களில் பிரதான சந்தேக நபரான “கொவ்வா” என அழைக்கப்படும் நபரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள், குறித்த வர்த்தகரைத் தாக்க பயன்படுத்திய நான்கு வாள்கள், இரண்டு முச்சக்கரவண்டிகள் மற்றும் 10 கிராமுக்கு அதிகமான போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.