குடிவரவு குடியகல்வு சட்டத்தை மீறி, கடவுச்சீட்டு தயாரித்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவிற்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கொழும்பு பிரதம நீதவான் நந்தன அமரசிங்க இன்று (நவ.11) இந்த உத்தரவை பிறப்பித்தார்.
இந்த தடையுத்தரவு இந்த மாதம் 17ம் திகதி வரை அமுலில் இருக்கும் என நீதவான் அறிவித்துள்ளார்.
இந்த உத்தரவை, குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு தொலைநகல் ஊடாக அறிவிக்குமாறு, நீதிமன்ற பதிவாளருக்கு நீதவான் உத்தரவிட்டார்.