கட்டுநாயக்க விமான நிலையத்தின், குடிவரவு மற்றும் குடியகல்வு பிரிவின், கணினிக் கட்டமைப்பில் ஏற்பட்டிருந்த கோளாறு சீராக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கணினிக் கட்டமைப்பில் ஏற்பட்டிருந்த கோளாறு காரணமாக, பயணிகள் அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.
இதனைக் கட்டுப்படுத்துவதற்காக, மனிதவலு முறைமையில் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இவ்வாறான நிலையில், தற்போது கணினிக் கட்டமைப்பில் ஏற்பட்டிருந்த கோளாறு சீராக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது.