புது டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு, அங்கு பணியாற்றும் அமெரிக்க பெண் அதிகாரிகள், முச்சக்கரவண்டிகளை செலுத்திச் சென்றனர்.
குண்டு துளைக்காத கவச வாகனங்களில் வலம்வரும் அமெரிக்க தூதரக அதிகாரிகள், முச்சக்கரவண்டிகளை செலுத்திச் சென்றது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து அந்த 4 பெண் அதிகாரிகளிடம் கேட்டபோது, முச்சக்கரவண்டிகளை செலுத்துவதன் மூலம் மக்களுடன் நெருங்கி பழகி, அவர்களின் வாழ்வியலை நன்கு புரிந்துகொள்ள முடிவதாகத் தெரிவித்தனர்.
ஒட்டோ கியர் வாகனங்களை மட்டுமே செலுத்திவந்த நிலையில், முதல்முறையாக, கிளட்சை பிடித்து வாகனங்களை ஓட்டுவதும், வீதிகளில் திரியும் கால்நடைகளை சமாளிப்பதும், பெரும் சவாலாக இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.