இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்டு, சிறைத் தண்டனைக்கு பின்னர், உயர் நீதிமன்றத்தால் அண்மையில் விடுவிக்கப்பட்ட நான்கு இலங்கை பிரஜைகளும், நாடு கடத்தப்படுவார்கள் என்று இந்திய மத்திய உள்துறை அமைச்சக தரப்புக்கள் தெரிவிக்கின்றன.
சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட முருகன் (ஸ்ரீஹரன்), ரொபர்ட் பயஸ், எஸ் ஜெயக்குமார் மற்றும் டி. சுதேந்திரராஜா என்ற சாந்தன் ஆகிய நால்வரையும் நாடு கடத்துமாறு தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நால்வரும் தற்போது திருச்சியில் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.